Monsieur Mangetout - நேற்றைய தொடர்ச்சி!!
20 தை 2018 சனி 18:30 | பார்வைகள் : 18438
'இரும்பு சாப்பிடும் பழக்கம் Lotito க்கு தொடர.. மக்களிடம் பிரபலமானார்.. பொது இடங்களில்.. வீதிகளில்.. 'க்ளப்'களில் எல்லாம் இவரின் சாதனைகள் தொடர ஆரம்பித்தன..
பருகுவதற்கு ஒரு க்ளாஸ் 'வைன்' கொடுத்தால்... வைனோடு க்ளாசையும் பருகும் பழக்கம் 'பகீர்' ஆச்சரியத்தைக் கொடுத்தது.
தனது 57 வயது வயதில், அவரின் சொந்த ஊரான Grenoble இல், ஜூன் 25, 2007 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார். அவர் வாழ்நாளில் சாப்பிட்ட உணவுகளில் பட்டியல் இதோ..
துவிச்சக்கர வண்டிகள் ஒரு 18..., 'சுப்பர் மார்க்கெட்'டில் பொருட்களை வைத்து தள்ளிக்கொண்டு வருவோமே ஒரு கூடை.. அதில் ஒரு 15, தொலைக்காட்சிகள் ஒரு 8, வீட்டின் அலங்கார விளக்குகள்.. அதில் ஒரு 6, இரும்புக்கட்டில்.. அதில் ஒரு 2...
கேட்டு ஜீரணிக்க கொஞ்சம் கஷ்ட்டமா தான் இருக்கும்... சவப்பெட்டி ஒன்றையும் இவர் சாப்பிட்டுள்ளார்... ஆனால் அவருக்கு ஜீரணித்து விட்டது..
காலையில் 'ப்ரேக்ஃபாஸ்ட்'கு இரண்டு குமிழ் விளக்குகள்.. மதியம் 'லஞ்ச்'க்கு நாலு டியூப் விளக்குகள்.. என வடிவேலு கதையாகிப்போனது.
இப்படி கிடைத்ததெல்லாம் சாப்பிடுவதால் இவருக்கு Monsieur Mangetout என பெயர் வந்தது.
வாங்களேன்.. ஹாயாக நாலு சைக்கிள் சாப்பிட்டுவிட்டு வருவோம்!!