இல் து பிரான்ஸ் - சுற்றுச்சூழல் மாசடைவு..!!
2 மாசி 2025 ஞாயிறு 14:48 | பார்வைகள் : 1414
தலைநகர் பரிஸ் மற்றும் இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் நாளை பெப்ரவரி 3, திங்கட்கிழமை அதிகளவு வளிமண்டல மாசடைவு நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மாசடைவை அவதானிக்கும் Airparif நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எளிதில் நோய்வாய்ப்படும் நபர்கள், நீண்டகால நோயுடையவர்கள், சுவாசப்பிரச்சனை கொண்டோர்கள், வயது முதிர்ந்தவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, முடிந்தவரை பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.