குழந்தைகளுக்கு முடி அடர்த்தியாக வளரணுமா?
2 மாசி 2025 ஞாயிறு 14:36 | பார்வைகள் : 416
ஒரு சில குழந்தை பிறக்கும்போது அவர்களின் மிகவும் அடர்த்தியான முடி இருக்கும், சில குழந்தைகளுக்கு முடி மிகவும் குறைவாக இருக்கும். ஒரு சில பிள்ளைகள் குறைவான முடியுடன் பிறந்தாலும், அவர்கள் வளர வளர முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் ஒரு சில பிள்ளைகளுக்கு மிகவும் குறைவாக முடியிருப்பதை எண்ணி பெற்றோர் மிகவும் கவலை படுவது உண்டு. மிகவும் குறைவாக இருக்கும் முடியை எப்படி அடர்த்தியாக்குவது என்பது பற்றி மருத்துவர் கூறியுள்ள தகவலை பார்ப்போம்.
எம்பிபிஎஸ் மருத்துவர் ஹேமப்ரியா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். குழந்தையின் கூந்தலை அடர்த்தியாக்கும் சில உணவுப் பொருட்களைப் பற்றி அவர் விளக்கியுள்ளார். குழந்தையின் முடி வளர்ச்சியில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சரியான ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் குழந்தையின் முடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும் என தெரிவித்துள்ளார்.
முடியின் வளர்ச்சிக்கு குழந்தைகளின் உணவில் முட்டை சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். முட்டையின் வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை மசித்து சாதம் அல்லது காய்கறிகளுடன் சேர்த்துக் கொடுக்கலாம். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முட்டையின் பாதி மஞ்சள் கருவைக் கொடுக்க வேண்டும், ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு மஞ்சள் கருவையும் கொடுக்கலாம். இது அவர்களின் ஊட்டச்சத்துக்களை கொடுப்பது மட்டும் இன்றி, முடியின் வளர்ச்சிக்கும் சிறந்தது என தெரிவித்துள்ளார்.
வெண்ணெய் பழத்தை மசித்து குழந்தைக்கு ஸ்ப்ரெட் ஆகக் கொடுக்கலாம். பழ கூழுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். குழந்தைக்கு தினமும் ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் வெண்ணெய் பழம் கொடுக்கலாம். வெண்ணெய் பழம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும் என தெரிவித்துளளார்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்த பிறகு அதை மசித்து குழந்தைக்குக் கொடுக்கலாம். சூப் மற்றும் கஞ்சியில் சேர்த்துக் கொடுக்கலாம். உங்கள் குழந்தைக்கு ஒரு முறைக்கு இரண்டு முதல் நான்கு டீஸ்பூன் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொடுக்கலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது அவர்களுக்குஇது முடிவளர்ச்சியை தூண்டும்
பல வகையான பருப்பு வகைகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் உள்ளன. பருப்பு வகைகளை முதலில் வேகவைத்து பின்னர் அவற்றை சூப் அல்லது மசித்து கொடுக்கலாம். உங்கள் குழந்தைக்கு ஒரு நாளைக்கு கால் கப் பருப்பு கொடுக்கலாம். இது அவர்களின் வளர்ச்சிக்கு சிறந்தது.
குழந்தைக்கு கஞ்சி அல்லது பால் தயாரிக்கும் போது அதில் பாதாம் மற்றும் வால்நட் பொடியைக் கலக்கலாம். குழந்தைக்கு தினமும் ஒரு டீஸ்பூன் வால்நட் பொடி கொடுக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து கொடுப்பதும் சிறந்தது.