இரும்பு செமித்தது! - நேற்றைய தொடர்ச்சி..!!

19 தை 2018 வெள்ளி 15:30 | பார்வைகள் : 21792
Lotito இன் விசித்திர வழக்கு தொடர்பாக மருத்துவ ஆராய்ச்சிகள் தொடர்ந்தது. உணவு செமிப்பதற்காக சுரக்கும் அமிலம் இவருக்கு அதிகப்படியாக சுரப்பதாகவும், சாதாரண மனிதர்களை காட்டிலும் இவருக்கு வீரியம் மிக்கதாகவும் இருக்கிறது. இதனாலேயே இரும்பு கூட செமிக்கிறது மருத்துவ உலகம் இறுதியாக ஒரு அறிக்கை சமர்ப்பிக்கிறது.
ஆனால் அந்த அறிக்கையில், இதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்ப்டவில்லை. சிறிய இரும்பு துண்டுகள் பின்னர் பெரிய துண்டுகளாக ஆனது. எதுவும் ஆகவில்லை. இறப்பர் சாப்பிட்டார்.. ம்ம்ம்ஹூம். ஒரு அசுமாத்தமும் இல்லை.
'எனக்கு எந்த உடல் துன்பமும், அஜீரண கோளாறும் ஏற்படவில்லை!' என குறிப்பிட்டார். பின்னர் இந்த துன்பத்தை இன்பமாக்கி காசாக்கினார்.
பொதுமக்கள் முன்பு, இரும்பு சாப்பிடும் நிகழ்ச்சிகள் செய்யத்தொடங்கினார். ஆணிகள் சாப்பிடுவது... 'ஸ்குரூ ட்ரைவர்' சாப்பிடுவது தொடங்கி.. வீட்டில் தொங்கும் அலங்கார விளக்குகளை எல்லாம் அடித்து இறக்கினார்.
பொதுமக்கள் பெரும் ஆச்சரியத்துடன் இதை பார்வையிட்டனர். இவர் தன் வாழ்நாளில் 9 தொன் இரும்புகளை அதாவது 9000 கிலோ எடைகொண்ட இரும்புகளை உண்டுள்ளார்.
பட்டியல் நாளை...!!
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025