உங்க கோ-சிஸ்டருடன் பிரச்னை வருகிறதா…?
2 மாசி 2025 ஞாயிறு 16:18 | பார்வைகள் : 424
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் மிக பெரிய விஷயம். முக்கியமாக இந்தியாவில் ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால் அவள் வாழ்க்கையில் ஒரு புதிதாக கணவன் மட்டும் வரவில்லை. அவருடன் சேர்ந்து அவரது குடும்பமே அவளுடைய வாழ்க்கையில் முக்கியமான அங்கமாக மாறிவிடுகின்றனர்..
இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், திருமணத்திற்குப் பிறகு, கணவர் குடும்பத்தில் உள்ள அத்தைகள் , மாமாக்கள், மருமகள்கள் மற்றும் சகோதரிகளுடன் நல்ல உறவுடன் இருந்தே ஆக வேண்டும்.. இல்லையென்றால் கணவரின் வீட்டில் எவ்வளவு நல்லவிதமாக நடந்துக் கொண்டாலும் நல்ல பெயர் வாங்க முடியாது.
எந்த அறிமுகமும் இல்லாத இரண்டு பெண்கள், திருமணத்துக்குப் பின் ஒரே வீட்டில் கோ- சிஸ்டர்ஸாக, நெருங்கிய உறவாக வாழ ஆரம்பிக்கிறார்கள். இவர்களுக்கிடையே அழகு, பணம், அறிவு, படிப்பு, புத்திசாலித்தனம், பர்சனாலிட்டி என நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதுவே போட்டியாகவும் மாறலாம். தன்னைவிட தன் கோ-சிஸ்டர் அழகானவராக இருந்தாலோ, வசதியானவராக இருந்தாலோகூட நீங்கள் சொல்வதுபோல பிரச்னைகள் வரலாம். அதனால், உங்களிடம் நான் ரொம்ப அழகு', நான் படித்தவள்' என்பதுபோன்ற எண்ணங்கள் இருக்கின்றனவா என்று உங்களை நீங்களே பரிசோதித்துப்பாருங்கள். அப்படியிருக்கிறது என்றால், அந்த குணத்தை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள்.
இதில் என்னதான் கூட்டுக் குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தாலும், எதிர்பாராமல் ஏற்படும் மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகின்றன. கணவன் தனது சகோதரனின் மனைவியுடன் உறவை சமநிலைப்படுத்துவது மிகவும் முக்கியம். மைத்துனர்களால் பல பிரச்சனைகள், சச்சரவுகள் வரும். ஆனால்.. இருவருக்குள்ளும் இதுபோன்ற கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க.. சின்ன சின்ன டிப்ஸ்களைப் பின்பற்றினால்.. கோ சிஸ்டர்களுடன் நட்புறவை வளர்க்கலாம்..
1. உங்கள் கோ சிஸ்டரின் வயதை எப்போதுமே பொருட்படுத்தாமல், அவர் உங்களை விட மூத்தவராக இருந்தாலும் சரி, வயதில் சிறியவராக இருந்தாலும் சரி, நீங்கள் அவளுடன் நல்ல உறவைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது அவளுடன் நல்ல தோழியாக நட்புடன் பழக வேண்டும்.
2. உங்கள் கோ சிஸ்டர் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். அப்போது உங்கள் இருவருக்கும் உள்ள உறவு நன்றாக இருக்கும். அவள் உன்னை நம்புவதற்கும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால்.. அவளும் தன் விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
3. உங்கள் கோ சிஸ்டருக்குப் பிடித்த ஒரு பொருள் உங்களிடம் இருக்கலாம். அதை வாங்க முடியாத சூழலில் அவர் இருக்கலாம். அதை அவருக்கு ஒருமுறைகூட நீங்கள் பகிராமல் இருக்கலாம். இதுவும் அவர் உங்களிடம் பிரச்னை செய்வதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படி ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள்..
4. உங்களிடம் இருக்கிற ஒரு ப்ளஸ் காரணமாக நீங்கள் கர்வமாக நடந்து கொள்கிறீர்களா என்பதையும் கவனித்து அதனை முதலி திருத்திக் கொள்ளுங்கள். இதெல்லாமே உங்களைப் பற்றி நீங்களே தெரிந்துகொள்வதற்கான வழிகள்தான்.
5. மனித மனங்களுக்குள் சின்ன வெறுப்பு விழுந்தாலும் உறவுக்குள் கசப்பு வந்துவிடும். உங்கள் இருவருடைய உறவுக்குள் இப்படிப்பட்ட வெறுப்பு ஏதாவது இருக்கிறதா என்று கண்டுபிடித்து சரி செய்யுங்கள். எப்போதுமே இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு இல்லாமல் விட்டுக் கொடுப்பது நல்லது.. காரணம் உங்கள் பிரச்னைகள் பார்ப்பவர்களுக்கு நல்ல சுவாரஸ்யமாக இருக்கும்..