Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் என்.ஐ.ஏ., மீண்டும் அதிரடி; 6 இடங்களில் ரெய்டு!

தமிழகத்தில் என்.ஐ.ஏ., மீண்டும் அதிரடி; 6 இடங்களில் ரெய்டு!

3 மாசி 2025 திங்கள் 03:44 | பார்வைகள் : 716


சென்னை, திருவாரூர் உள்ளிட்ட 6 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில், தடை செய்யப்பட்டு உள்ள ஐ.எஸ்., தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று (பிப்.,03) தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள், சென்னை, திருவாரூர் உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தினர்.

அண்மையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்திய நிலையில், மீண்டும் இன்று சோதனையில் இறங்கி உள்ளனர். அதேபோல் மன்னார்குடியில் ஆசாத் தெருவில் உள்ள பாபா பக்ருதீன் வீட்டிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் அல்பாசிக் என்ற முக்கிய நபரை என்.ஐ.ஏ., குழுவினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அல்பாசிக், மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாசலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவருக்கு தொடர்புடையவர்கள் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்