யமுனை தண்ணீரை குடியுங்கள்; மருத்துவனையில் வந்து பார்க்கிறேன்: கெஜ்ரிவாலை கிண்டல் செய்த ராகுல்!
3 மாசி 2025 திங்கள் 03:44 | பார்வைகள் : 700
யமுனை தண்ணீரை கெஜ்ரிவால் குடிக்க வேண்டும். பின்னர் அவரை மருத்துவமனையில் வந்து பார்க்கிறேன் என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
டில்லியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ராகுல், கெஜ்ரிவாலை கிண்டல் செய்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் ராகுல் பேசியதாவது: பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே போர் நடந்து கொண்டிருந்தது. இதற்கு இடையே, அரவிந்த் கெஜ்ரிவால் புதிய அரசியலை கொண்டு வருவேன். ஊழலை ஒழிப்பேன், யமுனை நதி நீரை சுத்தம் செய்வேன் என்று தெரிவித்தார்.
யமுனை நதி நீரை சுத்தம் செய்வதாக கூறிய, கெஜ்ரிவால் ஒரு குவளையில் தண்ணீரை குடிக்க வேண்டும். நான் அவரை மருத்துவமனையில் சென்று பார்ப்பேன். பிரதமர் மோடிக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார். வீடியோவில் கருப்பாகவும், அழுக்காகவும் காணப்பட்ட தண்ணீரை பாட்டிலில் அடைத்து, கையில் ராகுல் வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.