Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பை எச்சரிக்கும் சீனா!

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பை எச்சரிக்கும் சீனா!

3 மாசி 2025 திங்கள் 08:41 | பார்வைகள் : 1047


அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.

இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.

தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்தது. மெக்சிகோவும் விரைவில் பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'அமெரிக்காவின் வரிவிதிப்பு சர்வதேச வர்த்தக விதிமுறைகளை மீறுவதாக உள்ளது.

அமெரிக்கவின் இந்த செயல் இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என்றும் அமெரிக்கா தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உலக வர்த்தக கூட்டமைப்பில் (WTO) இதுதொடர்பாக வழக்கு தொடர உள்ளதாகவும் சீனா எச்சரித்துள்ளது.   

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்