தென்னிலங்கையில் ஏற்பட்ட பதற்றம் - மூவர் வெட்டிக்கொலை - ஐவர் கைது
3 மாசி 2025 திங்கள் 08:52 | பார்வைகள் : 433
அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் நேற்று (2) மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக மேற்படி கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்