மாதம் ஒரு சைக்கிள் சாப்பிட்ட மர்ம நபர்! - ஒரு அதிர்ச்சி தகவல்!!

18 தை 2018 வியாழன் 15:30 | பார்வைகள் : 22000
நமக்கு பசி எடுக்கிறது... உடனே டி.வி 'ஒன்' செய்கிறோம்.. சமையல் குறிப்பு வருகிறது.. அதைப்பார்த்து வீட்டில் சமைத்து உணவு உண்கிறோம். ஆனால் ஒரு நபர், பசி எடுத்தால் அந்த டி.வியையே சாப்பிட்டுவிடுகிறார்... அதிர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு தொடர்ந்து படியுங்கள்...
அவர் பெயர் Michel Lotito. இவருக்கு பசி எடுத்தால் சாப்பிடுவதெல்லம் சைக்கிள், தொலைக்கட்சி, கண்ணாடித்துண்டுகள், இரும்பு.. ஈயம் பித்தாளை.. டயர்.. உடைந்த கதிரைத்துண்டுகள்..
பிரான்சின் Grenoble நகரில், 1950 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி பிறந்த இவர், தனது 16 வயது வயதில் தனக்கு ஒரு விசித்திர பிரச்சனை இருப்பதை தெரிந்துகொள்கிறார்.
இவருக்கு, ஆப்பிள் வாழைப்பழம் சாப்பிடுவதை விட, செமிப்பதற்கு மிக கடினமாக இருக்கும் பொருட்களை உண்ணுவதற்கே பிடிக்கின்றது. அது ஏன்..? குறித்த் கடினமான உணவு பண்டங்கள் வேறு இலகுவாக செமித்து விடுகிறது. பின்னர் மீண்டும் பசி எடுக்கிறது...
ஒரு நாள், கொலைப்பசி. உண்பதற்கு எதுவும் கிடைக்கவில்லை. விளையாட்டாக கையில் கிடைத்த 'போல்ட்' ஒன்றை விழுங்கிவிட்டு தண்ணீரை குடித்துவிடுகிறார்.
'அவசரப்பட்டுட்டோமே!' என அவர் அப்போது நினைத்தாலும்.. மறுநாள் காலை அது செமித்து உடலை விட்டு வெளியேறுகிறது. தாங்கிக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி ஏற்படுகிறது.
பின்னர் அதுவே பழக்கமாகிவிடுகிறது. கையில் கிடைத்த சின்னச்சின்ன இரும்புப்பொருட்களை எல்லாம் அனாயசமாக வாய்க்குள் போட்டு விழுங்கிவிடுகிறார்.
இந்த ஆபத்தை உணர்ந்த அவரது பெற்றோர், உடனடியாக மருத்துவர்களிடம் அழைத்துச் செல்கின்றனர். 'இந்த விசித்திர உணவு (??!!) பழக்க'த்தினை நிறுத்தவே முடியாதா? என மருத்துவர்களிடம் கேட்க, அவர்களின் ஆச்சரியம் வேறாக இருந்தது.
'இரும்பைச் சாப்பிடுகிறார் சரி.. அது எப்படி சமிபாடடைகிறது?' என மருத்துவர்கள் மூளையை பிய்த்துக்கொள்கிறார்கள்.. விடை கிடைத்தது!
நாளை...
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025