சிகரெட் கள்ளச் சந்தை.. விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்!!
3 மாசி 2025 திங்கள் 09:50 | பார்வைகள் : 2385
பிரான்சில் கள்ளச் சந்தை மூலம் சிகரெட் விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. சிகரெட் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுக்கின்றனர்.
பிரான்சில் விற்பனைசெய்யப்படும் சிகரெட்டில் 30 தொடக்கம் 40% சதவீதமானவை கள்ளச்சந்தை மூலம் கொண்டுவரப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது. பிரதானமாக ஸ்பெயினில் இருந்து சிகரெட் பெட்டிகள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதை அடுத்து, சிகரெட் விற்பனையாளர்கள் சங்கம் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.