மீண்டும் 49.3... !!
3 மாசி 2025 திங்கள் 13:27 | பார்வைகள் : 1442
பெரும்பான்மையில்லாத அரசாங்கம், இன்று திங்கட்கிழமை வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியை நிறைவேற்ற 49.3 எனும் அரசியலமைப்பை பயன்படுத்தியுள்ளது.
வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியான 'சமூக பாதுகாப்பு' வரைவு இன்று பெப்ரவரி 3, திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு கொண்டுவரப்பட்டது. இதற்காக வாக்கெடுப்பு இன்றி அதனை நிறைவேற்ற பிரதமர் பிரான்சுவா பெய்ரூ, 49.3 அரசியலமைப்பை இரண்டு தடவைகள் பயன்படுத்தினார். அதை அடுத்து பாராளுமன்றத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
"நாடு வரவுசெலவுத் திட்டமின்றி இருக்க முடியாது. அதனை எக்காரணம் கொண்டும் நிறைவேற்றியாகவேண்டும்!" என பிரதமர் பெய்ரூ நேற்று தெரிவித்திருந்தார்.