சிம்புவின் 50வது பட அறிவிப்பு..!
3 மாசி 2025 திங்கள் 15:24 | பார்வைகள் : 478
நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை இன்று கொண்டாடிவரும் நிலையில், அவர் நடிக்க இருக்கும் மூன்று படங்களின் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்படி, இன்று அதிகாலை 12 மணிக்கு, சிம்பு நடிக்க இருக்கும் 48வது படத்தின் அறிவிப்பு வெளியானது. மேலும், இந்த படத்தை ’பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சற்றுமுன் சிம்பு நடிக்க இருக்கும் 50வது படத்திற்கான அறிவிப்பும் வெளியானது. இந்த படத்தை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகியிருந்தாலும், தற்போது இந்த படம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தை சிம்புவின் ஆத்மன் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான போஸ்டரில், சிம்பு தனது சிறுவயதில் அட்டகாசமாக கையில் தீப்பந்தத்தை ஏந்தியிருக்கும் காட்சி உள்ளது. அதன் பின்னணியில் பல பிணங்கள் இருப்பதை பார்க்கும் போது, இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.