Paristamil Navigation Paristamil advert login

சமந்தா சினிமா இயக்குனரைக் காதலிக்கிறாரா ?

 சமந்தா சினிமா இயக்குனரைக் காதலிக்கிறாரா ?

3 மாசி 2025 திங்கள் 16:05 | பார்வைகள் : 464


கடந்த சில மாதங்களாக சமந்தா பற்றிய செய்திகள் தான் அடிக்கடி வந்த வண்ணம் இருக்கிறது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தாவின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து நாக சைதன்யா 2ஆவதாக நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்தார்.

அப்போதும் கூட சமந்தா பற்றிய செய்திகள் தான் வெளியாகின. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் மற்றும் விவாகரத்து பற்றி சமந்தா பேசியிருந்தார். அதில் திருமணம் செய்த விவாகரத்து பெற்ற பெண்களை செகண்ட் ஹேண்ட் என்று எல்லோரு அழைக்கிறார்கள். கடைசி வரை அவர்களுக்கு அந்த அடைமொழியோடு தான் இந்த சமுதாயத்தில் வாழ்கிறார்கள் என்றெல்லாம் கூறியிருந்தார்.

இதற்கிடையில் மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா சினிமாவிலிருந்து விலகி அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். மையோசிடிஸ் என்ற தோல் நோயால் பெரியளவில் பாதிக்கப்பட்டு அதன் பிறகு தீவிர சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார். இப்போது சினிமா வாய்ப்புகள் இல்லையென்றாலும், வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அண்மையில் சமந்தாவின் அப்பா உயிரிழந்தது அவரை பெரியளவில் பாதித்தது. இதைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு இப்போது பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.

இந்த நிலையில் தான் இப்போது மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார். அதுவும் ஒரு இயக்குநருடன். யார் அந்த இயக்குநர், இருவருக்கும் எப்படி பழக்கம் என்பது பற்றி பார்க்கலாம். கடைசியாக சமந்தா நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய 2 படங்கள் வெளியாகின. ஆனால், இந்த 2 படங்களுமே தோல்வியை கொடுத்தன. ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவான Citadel: Honey Bunny சிட்டாடல் ஹனி பன்னி என்ற வெப் சீரிஸில் நடித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி முதல் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் பிக்கிள் பால் விளையாட்டில் சென்னை அணியை சமந்தா வாங்கிருந்து அதற்கான புரோமோஷனிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த 4ஆம் தேதி தொடங்கிய இந்த பிக்கிள் பால் போட்டி நேற்றுடன் முடிந்தது. இதில் பெங்களூரு சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில் தான் இந்தப் போட்டியை பார்க்க இயக்குநர் ராஜ் நிடிமோர் வந்துள்ளார். அவருடன் சமந்தாவும் வந்துள்ளார். ஆனால், இருவரும் கை கோர்த்தபடி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி போட்டியை இருவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது.

சினிமாவில் நடிகர், நடிகைகள் கை கோர்த்தபடி நடந்து செல்வது, கட்டியணைப்பது என்பதெல்லாம் பொதுவான விஷயம் தான். இதையெல்லாம் வைத்து இவர்கள் காதலிப்பதாக கூறுவது எல்லாம் வதந்தியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நடிகரும் இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் இருவரும் ஒன்றாக கை கோர்த்தபடி ஒரு நிகழ்ச்சிக்கு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிபிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்