covoiturage : இல் து பிரான்ஸ் சாலைகளில் மற்றுமொரு பிரிவு!!
4 மாசி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 766
மகிழுந்துகளில் தனியே பயணிப்பதற்கு பதிலாக மேலும் சிலரை இணைத்துக்கொண்டு பயணிக்கும் கார்பூலிங் எனப்படும் "covoiturage" இற்கு, இல்-து-பிரான்ஸ் சாலைகளில் தனி பிரிவு ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
ஒலிம்பிக் காலத்தின் போது, வீதியில் 'ஒலிம்பிக் வழி' என ஒன்றை வழி’ என ஒரு பிரிவு உருவாக்கப்பட்டிருந்தமை அறிந்ததே. அதேபோன்று, இந்த covoiturage இற்கு நிரந்தரமாக ஒரு வழியை உருவாக்கியுள்ளது பரிஸ் நகரசபை. சுற்றுவட்ட வீதியிலும் (périphérique), A1, A12 மற்றும் A13 சாலைகளில் ஒரு பகுதியிலும் இந்த ‘வழிகள்’ உருவாக்கப்பட உள்ளன.
மார்ச் 3 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும். மகிழுந்தில் குறைந்தது இருவர், அதிகபட்சமாக நால்வர் இருக்கும் மகிழுந்துகள் மாத்திரமே இதில் பயணிக்க முடியும். தனி ஒருவர் மகிழுந்தில் பயணிக்கும் போது அந்த வழியை பயன்படுத்த முடியாது.
அதேவேளை, அவசர சேவைகள், காவல்துறையினர் போன்றோர் அதில் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்படுள்ளது.
அத்தோடு, வாடிக்கைகள் இருக்கும்போது வாடகை மகிழுந்துகள் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.