Paristamil Navigation Paristamil advert login

Yé-yé - இசை வடிவத்துக்கு உயிரூட்டிய பிரெஞ்சு பாடகி!!

Yé-yé - இசை வடிவத்துக்கு உயிரூட்டிய பிரெஞ்சு பாடகி!!

11 தை 2018 வியாழன் 13:30 | பார்வைகள் : 17888


கடந்த இரு நாட்களாக, பாடகி France Gall குறித்து பல தகவல்களை அறிந்தீர்கள்.. இன்று, பிரெஞ்சு தேசத்தின் மிக புகழ்பெற்ற  Yé-yé  இசைவடிவம் குறித்து பார்க்கலாம்!!
 
இந்த இசைவடிவம் தெற்கு ஐரோப்பாவில் உருவானது. ஆங்கில சொல்லான 'Yeah-Yeah' எனும் சொல்லின் பிரெஞ்சு 'வெர்ஷன்' தான் இந்த Yé-yé! 
 
R&B மற்றும் Rock &Roll இரு இசையும் சேர்ந்தது போன்ற இந்த இசை, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற இடங்களில் எல்லாம் பரவி, பின்னர் உலகம் முழுவதும் 'பிரெஞ்சு இசை' எனும் அடையாளத்தோடு பரவியது...
 
இந்த இசைவடிவத்துக்கு பயன்படுத்தப்படும் குரல், நிச்சயமாக 'இளம் பெண்ணின் குரலா'த்தான் இருக்கவேண்டும் எனும் எழுதப்படாத விதி ஒன்றும் உள்ளது. 
 
இந்த இசை வடிவத்தை தனது பாடல்களில் பிரதானமாக்கியவர் France Gall. தனது இளமை ததும்பும் வசீகரக்குரலால் பல மேடைகளில் இந்த 'உற்சாக' இசையை பரவச்செய்தார். 
 
Yé-yé - இசையை பலர் பயன்படுதியிருந்தாலும், அதற்கு உயிரூட்டியவர் என நிச்சயமாக France Gall'ஐ சொல்லலாம்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்