பொதுமக்களை பதட்டத்துக்கு உள்ளாக்கிய 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு!
4 மாசி 2025 செவ்வாய் 09:43 | பார்வைகள் : 680
கட்டிடப்பணிகளின் போது 500 கிலோ எடையுள்ள இராட்சத வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
Val-d'Oise மாவட்டத்தின் Magny-en-Vexin நகர்ப்பகுதியில் கட்டிடப்பணி ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, புதைந்திருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு அகற்றும் படையினர் அழைக்கப்பட்டனர். 500 கிலோ எடையுள்ள குறித்த வெடிகுண்டு இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்தது எனவும், அது செயற்படும் நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை அடுத்து இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பின்னர், நேற்று பெப்ரவரி 3, திங்கட்கிழமை குறித்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.