AFC லீக்கில் கர்ஜித்த ரொனால்டோ! இரட்டை கோல் அடித்து மிரட்டல்

4 மாசி 2025 செவ்வாய் 10:25 | பார்வைகள் : 2805
அல் வசல் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோவின் அல் நஸர் அணி 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
AFC சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அல் நஸர் (Al Nassr) மற்றும் அல் வசல் (Al Wasl) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் அல் நஸர் வீரர் அலி அல்ஹஸன் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) பெனால்டி வாய்ப்பில் கோல் (44வது நிமிடம்) அடித்தார்.
பின்னர் இரண்டாம் பாதியின் 78வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் மிரட்டலாக கோல் அடித்தார்.
மேலும், 88வது நிமிடத்தில் முகமது அல் ஃபடில் கோல் அடிக்க, அல் நஸரின் மொத்த கோல் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இறுதிவரை அல் வசல் அணி கோல் அடிக்காததால் அல் நஸர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.