அஜித்தின் சூப்பர் ஹிட் பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறதா?
4 மாசி 2025 செவ்வாய் 14:22 | பார்வைகள் : 169
அஜித் நடித்துள்ள ’குட் பேட் அக்லி’ என்ற திரைப்படத்தில் அவர் நடித்த இன்னொரு திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிய ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருவதுடன், அவர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படத்தில் இடம்பெற்ற "வத்திக்குச்சி பத்திக்காதுடா" என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருப்பதாகவும், இந்த பாடல் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெரும் என்றும் புறப்படுகிறது.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் பல பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்ட நிலையில், தற்போது ’குட் பேட் அக்லி’ படத்திலும் ஒரு ரீமிக்ஸ் பாடல் இடம் பெற்றுள்ள செய்தி, அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.