இந்திய கிரிக்கெட் வீரர் ஷிவம் தூபேவின் சாதனை
4 மாசி 2025 செவ்வாய் 14:51 | பார்வைகள் : 139
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிவம் தூபே, சர்வதேச அளவில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஷிவம் தூபே 13 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் வெற்றியை பெற்ற முதல் வீரர் எனும் புதிய வரலாற்றை தூபே படைத்தார்.
இதுவரை 35 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிவம் தூபே (Shivam Dube) 4 அரைசதங்களுடன் 531 ஓட்டங்கள் குவித்துள்ளதுடன், 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.