Isabelle Geneviève எனும் இசைவடிவம்!!
9 தை 2018 செவ்வாய் 12:30 | பார்வைகள் : 18362
பிரெஞ்சு தேசத்தின் இசை பிரம்மாக்களில் ஒன்று நேற்று தொலைந்துள்ளது. பிரெஞ்சு தேசத்துக்கு சொந்தமான சில இசை வடிவங்களை வழக்கொழியாமல் பாதுகாத்த பிரெஞ்சு பாடகி France Gall, நேற்று முன்தினம் புற்று நோயினால் உயிரிழந்துள்ளார்.
இத்தாலியில் Naples தேசம், அங்கு வருடா வருடம் இடம்பெறும் பாடல் பாடும் போட்டியின் பத்தாவது வருட நிகழ்வில் (1965 ஆம் ஆண்டு) 18 வயது இளம் பெண் ஒருத்தி கலந்துகொள்கிறாள்.
தன் வசீகரக் குரலால் பல பாடகர்களை சாய்த்து, இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றியாளராக அப்பெண் தேர்வாகிறார். அவரே... பின்னாட்களில் France Gall என அழைக்கப்பட்ட புகழ்பெற்ற பாடகி ஆகிறார்.
இயற்பெயர் Isabelle Geneviève Marie Anne Gall என்பதாகும். ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி, 1947 ஆம் ஆண்டு பரிசில் பிறந்த இவர்,
சிறு வயது முதலே இசை மீது ஆர்வமும், பாடல் பாடும் திறமையும், வசீகரக்குரலால் ஈர்க்கும் திறமையும் கொண்டவராக இருந்தார்.
இவருக்கு இசை மீது ஆர்வம் வந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை, அப்பா ஒரு பாடலாசிரியர், இசையமைப்பாளர், இவரின் அம்மா ஒரு பாடகி, என 'இசைக்குடும்பம்!' என்பதால் இசை சிறுவயது முதலே ஒட்டிக்கொண்டது.
தவிர, தனது 15 ஆவது வயதில் பிரெஞ்சு பாடகர் Serge Gainsbourg இடம் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பல பாடல்களை பாடி, ஒலிப்பதிவு செய்து பல இசையமைப்பாளர்களுக்கு அனுப்பி வைத்தார்.
பல முயற்சிகளின் பின்னர், தனது இசைக்கனவு, அவரது 16 ஆவது வயதில் பலித்தது...!!
(நாளை)