சீனாவில் தயாராகும் Bunker - மூன்றாம் உலகப்போர் அச்சம்
4 மாசி 2025 செவ்வாய் 16:29 | பார்வைகள் : 547
சீனா, பிரம்மாண்டமாக ஒரு ராணுவ நகரத்தையே உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ள விடயம், மூன்றாம் உலகப்போர் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
சீனா, பீஜிங்குக்கு வெளியே, அமெரிக்க பாதுகாப்புத்துறை அலுவலகம் அமைந்துள்ள கட்டிடமான பென்டகனை விட 10 மடங்கு பெரிய ராணுவ நகரம் ஒன்றை உருவாக்கிவருகிறது.
அது, சீனா மூன்றாம் உலகப்போருக்கு தயாராவதற்கான அறிகுறி என மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகள் கருதுகின்றன.
2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்தே அந்த கட்டுமானப்பணியை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்துவருகிறார்கள்.
பீஜிங் ராணுவ நகரம் என அழைக்கப்படும் அந்த நகரம், இனி கட்டுப்பாட்டு மையமாக செயல்படக்கூடும் என்றும், அங்கு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குக்காக பாதுகாப்பான ஒரு bunker உருவாக்கப்பட்டு வருவதாகவும் நம்பப்படுகிறது.
வாஷிங்டனில் அமைந்துள்ள சீன தூதரகம் அப்படி ஒரு நகரம் அமைவது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளது.
ஆனால், சேட்டிலைட் புகைப்படங்கள், 1,500 ஏக்கர் அளவுள்ள அந்த குறிப்பிட்ட இடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளதுடன், அந்த இடம் குறித்த தகவல்கள் இணையத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.