நம்பிக்கை இல்லா பிரேரணை... இன்று வாக்கெடுப்பு!!
5 மாசி 2025 புதன் 07:43 | பார்வைகள் : 421
பிரதமர் பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீது எதிர்கட்சிகள் கொண்டுவந்திருந்த நம்பிக்கை இல்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பு இன்று பெப்ரவரி 5, புதன்கிழமை பிற்பகல் இடம்பெற உள்ளது.
வரவுசெலவுத்திட்டத்தின் ‘சமூக பாதுகாப்புக்கான’ வரைவு திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. பிரதமர் பெய்ரூ, 49.3 அரசியலமைப்பை பயன்படுத்தி அதனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றியிருந்தார். அதை அடுத்து La France insoumise கட்சி இரண்டு நம்பிக்கை இல்லா பிரேரணையை பெய்ரூவின் அரசாங்கம் மீது கொண்டுவந்திருந்தது.
இந்த வாக்கெடுப்புக்கு ஆதரவாக சோசலிச கட்சி வாக்களிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது. அதேவேளை Rassemblement national கட்சி வாக்களிக்குமா இல்லையா என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை.
இன்று பிற்பகல் பாராளுமன்ற அமர்வில் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.