41 வருடங்கள் காத்திருந்த ஈஃபிள் கோபுரம்! - வரலாற்றில் இருந்து..
4 தை 2018 வியாழன் 11:00 | பார்வைகள் : 21002
இன்று பிரான்சின் மிக உயரமான நினைவுச் சின்னம் நமது 'ஈஃபிள் கோபுரம்!' இந்த உயரத்தை மிஞ்சிய கட்டிடம் கட்டப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஈஃபிள் கோபுரம் கட்டும் போது அது உலகில் மிக உயரமான 'மனிதர்களால் கட்டப்பட்ட' கட்டிடமாக இருந்தது.
10,100 தொன்கள் இரும்பினால் கட்டப்பட்டுள்ள ஈஃபிளின் உயரம் நீங்கள் அறிந்ததுதான். 324 மீட்டர்கள்!!
1889 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி இந்த கோபுரம் திறக்கப்பட்டபோது 'உலகில்' மிக உயரமான கோபுரம் என அறிவிக்கப்பட்டது.
எப்பிடியாயின் இந்த சாதனையை எந்த நாட்டினரேனும் முறியடிப்பார்கள் என காத்திருக்க... சரியாக 41 வருடங்களின் பின்னர் அந்த சம்பவம் இடம்பெற்றது.
நியூயோர்க் நகரத்தில் கட்டப்பட்ட Chrysler கட்டிடம் உலகின் உயரமான கட்டிடம் என அறிவிக்கப்பட்டது. அதன் உயர 318.9 மீட்டர்கள். அப்படிப்பார்த்தாலும் ஈஃபிள் கோபுரத்தினை விட 5.1 மீட்டர்கள் உரம் குறைந்து தானே உள்ளது என்கிறீர்களா? இல்லை.. ஈஃபிள் கோபுரத்தில் அப்போது 'அன்ரனா' இல்லை!
உண்மையில் ஈஃபிள் கோபுரத்தின் உயரம் 300 மீட்டர்கள் தான்.
சோகம் என்னவென்றால்... ஈஃபிள் கோபுரத்தின் உயரத்தினை முறியடித்த Chrysler கட்டிடத்தின் சாதனையை வெறும் 11 மாதங்களில் (1931) Empire State கட்டிடம் முறியடித்தது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan