சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி டிக்கெட்டுகள்
5 மாசி 2025 புதன் 10:16 | பார்வைகள் : 141
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 23-ஆம் திகதி துபாயில் நடக்கிறது.
மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்கியது.
இந்த டிக்கெட் விலை 125 திர்ஹாம், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2964 ஆகும். பிரீமியம் லவுஞ்சின் விலை 5,000 திர்ஹாம்கள் (இந்திய நாணயத்தில் ரூ.1,18,000) ஆகும்.
இருப்பினும், இந்த தகவலை ஐ.சி.சி இன்னும் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி முதலில் முழுவதுமாக பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் இந்திய அணி விளையாட பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டது.
இதையடுத்து இந்த போட்டி ஹைபிரிட் மாடலில் நடைபெறுகிறது. இந்தியாவின் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறும். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 25,000 இருக்கைகள் உள்ளன.