Seine-Saint-Denis : பேருந்து மோதி இரு பாதசாரிகள் காயம்!
![Seine-Saint-Denis : பேருந்து மோதி இரு பாதசாரிகள் காயம்!](ptmin/uploads/news/France_rajeevan_WhatsApp Image 2025-02-05 at 16.04.07_3e55a6b7.jpg)
5 மாசி 2025 புதன் 10:36 | பார்வைகள் : 351
RATP இற்கு சொந்தமான பேருந்து ஒன்று ஒன்று மோதியதில் இரு பாதசாரிகள் காயமடைந்துள்ளனர்.
Noisy-le-Grand (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி 5, இன்று புதன்கிழமை காலை 9 மணி அளவில் Noisy le Grand-Mont d'Est நிலையத்துக்கு முன்பாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 320 ஆம் இலக்க பேருந்து ஒன்று பாதசாரிகள் இருவரை மோதித்தள்ளியுள்ளது.
பாதாசாரிகள் கடவையில் இருவரும் வீத்யை கடந்த போது, பேருந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.