இங்கேயே வாழவிரும்புகின்றோம் - காசா மக்களின் மன நிலை
![இங்கேயே வாழவிரும்புகின்றோம் - காசா மக்களின் மன நிலை](ptmin/uploads/news/World_renu_16-4-3.jpg)
5 மாசி 2025 புதன் 16:00 | பார்வைகள் : 416
காசாவை விட்டு வெளியேறும் எண்ணமில்லை என காசா மக்கள் தெரிவித்துள்ளனர்.
காசா மக்களை வேறு பகுதிகளில் மீள்குடியேற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து மிகுந்த வெறுப்படைந்துள்ளதாக காசாவில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது
அக்ரம்கான் ரபாவிற்கும் கான் யூனிசிற்கும் இடையில் காசாவின் தென்பகுதியில் வசிக்கின்றார்.
யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் காசாவின் வடபகுதியில் பலர் தங்கள் பகுதிகளிற்கு திரும்புவதை அவர் பார்த்துள்ளார்.
2023 ஒக்டோபர் மாதம் 7 ம்திகதி மோதல் வெடித்த பின்னர் காசாவிலிருந்த 70 வீதமான கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக ஐநாமதிப்பிட்டுள்ள போதிலும்பாலஸ்தீனியர்கள் வேறு நாட்டிற்கு செல்வதை விட தற்காலிக தங்குமிடங்களிலேயே வாழ விரும்புவார்கள் என அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன மக்கள் மீள்எழும் திறன் கொண்டவர்கள்,அவர்கள் இன்னமும் இங்கேயே வாழவிரும்புகின்றனர், அவர்கள் வேறு எங்கும் செல்வார்கள் என நான் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் குடிநீரை போக்குவரத்தை அடிப்படை வாழ்விற்கான விடயங்களை பெறுவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர்,ஆனால் அவர்கள் இந்த மண்ணிலிருந்து வெளியேறுவது வேறு எங்காவது செல்வது குறித்து ஒருபோதும் சிந்தித்ததில்லை, என அவர் தெரிவித்துள்ளார்.