பதவியில் இருக்கும்போதே உயிர் பிரிந்த ஜனாதிபதி!!
2 தை 2018 செவ்வாய் 16:30 | பார்வைகள் : 18032
பிரெஞ்சு தேசம் எத்தனையோ ஜனாதிபதிகளை சந்தித்துள்ளது.. ஆனால் வரலாற்றில் ஒரே ஒரு ஜனாதிபதி மாத்திரமே தனது பதவிக்காலத்தில் உயிரிழந்துள்ளார். அவர் யார் தெரியுமா?
ஜனாதிபதி Georges Pompidou!!
Pompidou ஐந்தாண்டு காலம் ஜனாதிபதியாக இருந்தவர். 1969 ஆம் ஆண்டு, ஜூன் 20 ஆம் திகதியில் இருந்து, ஏப்ரல் 2, 1974 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தார்.
ஜனாதிபதியாக இருக்கும் போதே அவர் தன்னுடைய 62 வது வயதில் பரிசில் உயிரிழந்தார்.
ஜனாதிபதி Georges Pompidou மிக சுவாரஷ்யமானவர். ஒரு பழமை விரும்பி. அவர் குறித்த சில தகவல்கள் உங்களுக்காக...!!
முழுப்பெயர் Georges Jean Raymond Pompidou... ஜூலை மாதம் 5 ஆம் திகதி 1911 ஆம் ஆண்டு Montboudif இல் பிறந்தார்.
பிரெஞ்சு இராணுவத்தில் பணியாற்றினார். மதிப்புக்குரிய சாள்-து-கோல் அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும்பொழுது, இவர் பிரதமராக பணியாற்றினார்.
1968 ஆம் ஆண்டு பிரதமர் பதவியை துறந்து, அதற்கு அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.
ஜனாதிபதி உயிரிழந்த போது, அவரின் இறுதிச் சடங்குகள் Notre-Dame தேவாலயத்தில் இடம்பெற்றது. அமெரிக்க ஜனாதிபதி Richard Nixon, பிரித்தானிய பிரதமர் Edward Heath உட்பட, துனிசிய ஜனாதிபதி, ஜெர்மனிய முதல்வர் என பலர் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.
பின்னர், அதே வருடம் Valéry Giscard d'Estaing ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்!!
(புகைப்படத்தில் ஜனாதிபதியுடன் இருப்பவர் ஜெர்மனியின் அந்நாளைய முதல்வர் Willy Brandt.)