Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்

6 மாசி 2025 வியாழன் 03:16 | பார்வைகள் : 408


வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: வடகிழக்கு பருவக் காற்று முற்றிலுமாக விலகிய நிலையில், தமிழகத்தில் சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும். இன்றும், நாளையும் பெரும்பாலான பகுதிகளில், பகல் நேரத்தில் வெப்ப நிலை இயல்பை விட, 2 முதல், 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும். அதிகாலை நேரத்தில் லேசான பனி மூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுவாக, ஜன., மாதத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்தாலும், மார்ச் மாதத்தில் தான் வெயில் அதிகரிக்க துவங்கும். இந்த ஆண்டு பிப்., முதல் வாரத்திலேயே வெப்ப நிலை படிப்படியாக உயர துவங்கியுள்ளது. இது, கோடை காலம் முன்கூட்டியே துவங்குவதை உறுதி செய்வதாக கூறப்படுகிறது.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்