ஐவரை அதிரடியாக கைது செய்த Aulnay-sous-Bois நகர காவல்துறையினர்!!!
![ஐவரை அதிரடியாக கைது செய்த Aulnay-sous-Bois நகர காவல்துறையினர்!!!](ptmin/uploads/news/France_rajeevan_WhatsApp Image 2025-02-06 at 08.49.54_64b6c751.jpg)
6 மாசி 2025 வியாழன் 09:00 | பார்வைகள் : 2433
Aulnay-sous-Bois நகர காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடியான சுற்றிவளைப்பில், ஐவர் கொண்ட குழு ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பில் கடந்த சில மாதங்களாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பெப்ரவரி 4, செவ்வாய்க்கிழமை Val-de-Marne மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் ஒரே நேரத்தில் புகுந்த காவல்துறையினர் ஐந்து பேரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 14.3 கிலோ கஞ்சா, 7 கிலோ d'ecstasy, 1.2 கிலோ கொக்கைன், 400 MDMA ஆகியவை மீட்கப்பட்ட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகர காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
![](/images/engadapodiyalxy.jpg)