€77 மில்லியன் யூரோக்கள் வென்ற பெண்!
![€77 மில்லியன் யூரோக்கள் வென்ற பெண்!](ptmin/uploads/news/France_rajeevan_IMG-20250206-WA0004.jpg)
6 மாசி 2025 வியாழன் 11:00 | பார்வைகள் : 2965
EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் பிரெஞ்சுப் பெண் ஒருவர் €77 மில்லியன் யூரோக்கள் வென்றுள்ளார்.
டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற சீட்டிழுப்பிலேயே குறித்த பெண் வென்றுள்ளார். மொத்தமாக €77 557 137 யூரோக்களை அவர் வெற்றித்தொகையாக பெற்றுள்ளதாக EuroMillions இன் தாய் நிறுவனமான FDJ அறிவித்துள்ளது.
வெற்றியாளர் தன்னை வெளிப்படுத்த விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, குறித்த பெண் சில ஆண்டுகளுக்கு முன்னர் EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் வெற்றிக்கு அருகாமையில் வந்து ஒரு இலக்கத்தினால் மிகப்பெரும் தொகை ஒன்றை தவற விட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை €52 மில்லியனுக்கான சீட்டிழுப்பு இடம்பெற உள்ளது.
●●●●
அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் கலந்துகொள்வது தனிநபர் விருப்பமாகும். இதில் பண இழப்பு அபாயம் உள்ளது. ஆலோசனைகளுக்காக 09 74 75 13 13 எனும் இலக்கத்துக்கு அழைக்கவும்.
![](/images/engadapodiyalxy.jpg)