கடைசி டெஸ்டில் துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கை- முதல் விக்கெட்டை தூக்கிய லயன்
![கடைசி டெஸ்டில் துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கை- முதல் விக்கெட்டை தூக்கிய லயன்](ptmin/uploads/news/Sports_renu_ytjjj.jpg)
6 மாசி 2025 வியாழன் 09:44 | பார்வைகள் : 415
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம் செய்து வருகிறது.
காலியில் (Galle) இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
இலங்கை அணித்தலைவர் தனஞ்செய டி சில்வா நாணய சுழற்சியில் வெற்றி பெற்றார். பின்னர் அவர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
பதும் நிசங்கா (Pathum Nissanka) மற்றும் திமுத் கருணாரத்னே ஆகிய இருவரும் ஆட்டத்தை தொடங்கினர்.
பதும் நிசங்கா 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் லயன் பந்துவீச்சில் போல்டு ஆனார். இலங்கை அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெற்றால் தொடர் சமனில் முடியும் என்பதால், இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
![](/images/engadapodiyalxy.jpg)