Paristamil Navigation Paristamil advert login

புராதானங்களை பறைசாற்றும் Le Marais!!

புராதானங்களை பறைசாற்றும் Le Marais!!

26 மார்கழி 2017 செவ்வாய் 14:30 | பார்வைகள் : 18062


பரிசில் நீங்கள் வசிப்பவர்கள் என்றால், Le Marais பகுதிக்கு நிச்சயம் சென்றிருப்பீர்கள்.. அங்கிருக்கும் கட்டிடங்களையோ.. தேவாலயங்களையோ நீங்கள் பார்க்க நேர்ந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.. எல்லமே பல நூற்றாண்டுகள் பழமையான கட்டிடங்கள் தாம்!!
 
இங்கிருக்கும் ஒவ்வொரு கட்டிடங்களும் பழமை மற்றும் திறமையான கட்டிடக்கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. மூன்றாம் வட்டாரத்தில் ஒரு பகுதியும், நான்காம் வட்டாரத்தில் ஒருபகுதியும் கொண்டுள்ளது இந்த நகரம்!
 
1345 ஆம் ஆண்டு கட்டப்பட்ட Hôtel de Sens இங்கு நீங்கள் அவசியம் பார்வையிட வேண்டிய கட்டிடம். 'பட்டர்' பூசியது போன்ற வர்ணத்திலும் கறுப்பு கூரையும் கொண்டு பழமையை பறைசாற்றுகிறது.  
 
1651 அம் ஆண்டில் இருந்து 1655 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிக்குள் கட்டப்பட்ட Hôtel de Guénégaud கட்டிடமும் இங்கு அவசியம் பார்க்கவேண்டிய ஒன்றாகும். மூன்றாம் வட்டார பகுதிக்குள் உள்ளது. 
 
யுத இன மக்களுக்காக ஒரு அருங்காட்சியம் உண்டென்றால்.. அது Musée d'Art et d'Histoire du Judaïsme ஆக தன் இருக்கும். பிரெஞ்சு 'ஆட்லொறி' வீரர் Alfred Dreyfus இன் சிலை கம்பீரமாய் நிற்க.. பின்னால் யூதர்களின் அடையாளம் பலவற்றை உள்ளடக்கி உள்ளது அருங்காட்சியகம். 
 
இங்குள்ள Hôtel d'Albret இன் நுழைவாயிலை நீங்கள் அவசியம் பார்வையிடவேண்டும். பிரெஞ்சு கட்டிடக்கலைகள் மீது உங்களுக்கு அளப்பரிய மரியாதை ஏற்படும். 
 
இதுபோன்ற புராதன கட்டிடங்கள் இங்கு நிறைந்து இருப்பதாலேயே, இது வரலாற்று நகரமாக அடையாளமாக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்