அற்புதமான வாழ்த்து செய்தி.,.. இதைவிட சிறந்தது இருக்கமுடியாது - ரொனால்டோ உருக்கம்
![அற்புதமான வாழ்த்து செய்தி.,.. இதைவிட சிறந்தது இருக்கமுடியாது - ரொனால்டோ உருக்கம்](ptmin/uploads/news/Sports_renu_specialj.jpg)
6 மாசி 2025 வியாழன் 09:50 | பார்வைகள் : 426
தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 40வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
அவருக்கு கிளப் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரொனால்டோ வெளியிட்டுள்ள பதிவில், "அற்புதமான பிறந்தாள் செய்திகளுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி! குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஒரு சிறந்த நாளைக் கழித்தேன், இதைவிட சிறந்ததை என்னால் கேட்க முடியாது" என உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.
923 கோல்கள் அடித்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, 1000 கோல்கள் எனும் இலக்கை விரைவில் எட்டுவேன் என சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![](/images/engadapodiyalxy.jpg)