கொங்கோ - கோமா சிறைச்சாலையில் கொடூரம் - பெண்கள் பாலியல் வன்முறையின் பின் உயிருடன் எரிப்பு
![கொங்கோ - கோமா சிறைச்சாலையில் கொடூரம் - பெண்கள் பாலியல் வன்முறையின் பின் உயிருடன் எரிப்பு](ptmin/uploads/news/World_renu_congooo.jpg)
6 மாசி 2025 வியாழன் 10:11 | பார்வைகள் : 1219
கொங்கோவின் கோமா நகரசிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியார்கள் கொங்கோவின் கோமா நகரத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவியவேளை கோமா நகரின் சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
கோமாவின் முன்ஜென்ஸ் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்ல முயன்றவேளை பெண்கைதிகளை தாக்கினார்கள் என ஐநா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அந்த சிறையிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தப்பிச்சென்றனர் அவர்கள் பெண்கைதிகளின் பகுதிக்கு தீ மூட்டினார்கள் என கோமாவில் உள்ள ஐக்கியநாடுகள் அமைதிப்படையின் பிரதிதலைவர் தெரிவித்துள்ளார்.
பெரும்சிறை உடைப்பு நிகழ்ந்தது 4000க்கும் அதிகமானவர்கள் தப்பிச்சென்றனர்,அந்த சிறையில் 100க்கும் அதிகமான பெண்களும்தடுத்துவைக்கப்பட்டிருந்தனர், அவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பின்னர் அந்த பகுதிக்கு தீமூட்டினார்கள் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்என கோமாவில் உள்ள ஐக்கியநாடுகள் அமைதிப்படையின் பிரதிதலைவர் தெரிவித்துள்ளார்.
ருவாண்டா ஆதரவுஎம் 23 கிளர்ச்சியாளர்கள் அந்த நகரினை அடைந்த பின்னர் சிறைச்சாலை அமைந்துள்ள பகுதியிலிருந்து பெரும் புகைமண்டலம் எழுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
![](/images/engadapodiyalxy.jpg)