அஜித்துடன் மீண்டும் மகிழ் திருமேனி இணைகிறாரா ?
![அஜித்துடன் மீண்டும் மகிழ் திருமேனி இணைகிறாரா ?](ptmin/uploads/news/Cinema_tharshi_ajima.jpg)
6 மாசி 2025 வியாழன் 13:49 | பார்வைகள் : 486
'விடாமுயற்சி' படத்தைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாக உள்ளது
அஜித்தின் புதிய படம் 'விடாமுயற்சி' உலகம் முழுவதும் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பே, இப்படத்தில் அதிரடி காட்சிகளோ, பஞ்ச் வசனங்களோ இடம்பெறாது என இயக்குநர் மகிழ் திருமேனி பல்வேறு பேட்டிகளில் தெரிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.
ஆனால், படம் வெளியான பிறகு கிடைத்து வரும் விமர்சனங்கள், இது மற்ற அஜித் படங்களை விட வித்தியாசமானது என்றும், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படம் என்றும் பாராட்டி வருகின்றன. குறிப்பாக அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
![](/images/engadapodiyalxy.jpg)