போதைப்பொருள் கடத்தல்.. சென்ற ஆண்டில் 110 பேர் கொலை!!
![போதைப்பொருள் கடத்தல்.. சென்ற ஆண்டில் 110 பேர் கொலை!!](ptmin/uploads/news/France_rajeevan_WhatsApp Image 2025-02-06 at 22.34.23_e36f5f77.jpg)
6 மாசி 2025 வியாழன் 19:00 | பார்வைகள் : 1365
போதைப்பொருள் கடத்தல் தொடர்புடைய துப்பாக்கிச்சூட்டில் சென்ற ஆண்டு 110 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சென்ற 2024 ஆம் ஆண்டில் மொத்தமாக 53.5 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, இந்த கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடுகளில் 110 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 341 பேர் காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை சென்ற 2023 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளதாகவும், அந்த ஆண்டில் 139 பேர் கொல்லப்பட்டும், 413 பேர் காயமடைந்தும் இருந்தனர்.
அதேவேளை, சென்ற ஆண்டு 53.5 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 130% சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
![](/images/engadapodiyalxy.jpg)