Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் ‘செயற்கை நுண்ணறிவு’ தொழில்நுட்பத்துக்காக 50 பில்லியன் யூரோக்கள் வரை முதலிடும் ஐக்கிய அரபு!

பிரான்சில் ‘செயற்கை நுண்ணறிவு’ தொழில்நுட்பத்துக்காக 50 பில்லியன் யூரோக்கள் வரை முதலிடும் ஐக்கிய அரபு!

7 மாசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1939


செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டுக்கு இன்னும் ஓரிரு தினங்களே இருக்கும் நிலையில், புதிய முதலீட்டார்களை பிரான்ஸ் ஈர்த்துள்ளது. குறிப்பாக ஐக்கிய அமீரகம் 50 பில்லியன் யூரோக்கள் வரை முதலிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று பெப்ரவரி 6, வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அமீரக மன்னர் Mohamed bin Zayed Al-Nahyane ஆகியோர் சந்தித்து உரையாடி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். 30 தொடக்கம் 50 பில்லியன் யூரோக்கள் வரை பரிசில் முதலிட்டு, மிகப்பெரிய ‘தரவு சேகரிப்பு மையம்’ ஒன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய கல்லூரி ஒன்றை நிர்மானித்து அதில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையமாக செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்