சோபிதா துலிபாலா சொன்ன நல்ல செய்தி நாக சைதன்யா ரசிகர்கள் மகிழ்ச்சி..!
![சோபிதா துலிபாலா சொன்ன நல்ல செய்தி நாக சைதன்யா ரசிகர்கள் மகிழ்ச்சி..!](ptmin/uploads/news/Cinema_tharshi_sobi.jpg)
7 மாசி 2025 வெள்ளி 14:21 | பார்வைகள் : 352
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா ஆகிய இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்த நல்ல செய்தி, நாக சைதன்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் திருமணம் முறிவு ஏற்பட்ட பின்னர், கடந்த டிசம்பர் நான்காம் தேதி சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா 2வது திருமணம் செய்து கொண்டார். திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில், இன்று அவர் நடித்த ‘தண்டேல்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். "இந்த படத்தை ரசிகர்கள் போலவே நானும் திரையரங்குகளில் பார்க்க உற்சாகமாக இருக்கிறேன். படப்பிடிப்பு நேரத்தில் நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் மிகுந்த கவனம் செலுத்தி வந்தீர்கள் என்பதை நான் அருகில் இருந்து பார்த்தேன்," என்று பதிவிட்டுள்ளார்.
அது மட்டுமின்றி, "ஒரு நல்ல செய்தியாக, நீங்கள் ஒரு வழியாக உங்கள் தாடியை சேவ் செய்திருக்கிறீர்கள். முதல் முறையாக உங்கள் முகத்தை முழுவதுமாக பார்க்கிறேன்," என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
![](/images/engadapodiyalxy.jpg)