பரிஸ் : மதுபோதையில் மனைவிக்கு கத்திக்குத்து! - உயிருக்கு போராட்டம்!!
![பரிஸ் : மதுபோதையில் மனைவிக்கு கத்திக்குத்து! - உயிருக்கு போராட்டம்!!](ptmin/uploads/news/France_rajeevan_NJWAN3SZPRBGHLYZZWNMA7DIYI.jpg)
7 மாசி 2025 வெள்ளி 16:24 | பார்வைகள் : 1686
31 வயதுடைய பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்ட அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் rue de Belleville வீதியில் உள்ள பேருந்து நிறுத்துமிடம் ஒன்றில் இச்சம்பவம் பெப்ரவரி 6, நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மருத்துவக்குழுவினரால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வரும் அவர், உயிருக்கு போராடிவரும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலை மேற்கொண்ட 34 வயதுடைய குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாக்குதலின் போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும், அடிவயிற்றில் கத்தியால் பல தடவைகள் குத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
![](/images/engadapodiyalxy.jpg)