Paristamil Navigation Paristamil advert login

ஜோந்தாமினர்களுக்கான பணிகள் குறித்து தெரியுமா??!

ஜோந்தாமினர்களுக்கான பணிகள் குறித்து தெரியுமா??!

13 மார்கழி 2017 புதன் 11:30 | பார்வைகள் : 19597


உண்மையில் ஜோந்தாமினர்கள் தான் தூணிலும் இருக்கிறார்கள்.. துரும்பிலும் இருக்கிறார்கள்.. இன்று பிரெஞ்சு புதினத்தில், நம் தேசிய காவல்படையான ஜோந்தாமினர்களின் கடமைகள் குறித்து பார்க்கலாம்...
 
ஜோந்தாமினர்கள் நேரடியாக உள்துறை அமைச்சின் கீழ் இயங்குகின்றனர். நாட்டின் பாதுகாப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் ஜோந்தாமினர்களில் பல்வேறு பிரிவினர் உள்ளனர். அனைவரும் ஆயுதம் தரித்தவர்கள்..!!
 
உள்துறை அமைச்சு விதிக்கும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இவர்கள் செயற்படுத்தவேண்டும். நாட்டின் பாதுகாப்பு, வீதி பாதுகாப்பு, சுற்றுலா துறையின் பாதுகாப்பு, உடனடி ஆபத்தில் இருக்கும் மக்கள் உள்ளிட்ட பல பாதுகாப்பு பணிகளை நிறைவேற்ற வேண்டும். 
 
குற்றங்களை விசாரித்தல், அவற்றை பின் தொடர்தல்.. கடத்தல், கொள்ளை, பண மோசடி, ஆட் கடத்தல், பாலியல் தாக்குதல்கள் போன்றவற்றை முறியடித்தல், பணயக்கைதிகளை மீட்டல் என மிக தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
 
பொதுமக்கள் கூடும் இடங்கள், பாதுகாப்பு வலையங்கள், சுற்றுலாத்துறை, வணிக வளாகங்கள், ஆர்ப்பட்டம் இடம்பெறும் இடங்கள், அங்கு இடம்பெறும் வன்முறைகளை தடுத்தல் என கூட்டம் அதிகம்  என்றால் கூடிவிடும் ஜோந்தாம்..!
 
பயங்கரவாதம், பயங்கரவாதத்தை கண்காணித்தல், பின் தொடர்தல், தேடுதல் வேட்டை மேற்கொள்ளுதல்.. ஆயுதம் தூக்கினால் அதோ கதி தான்!!
 
விமான நிலையங்கள், அணு ஆலைகள், இராணுவ முகாம் அமைந்திருக்கும் இடங்கள், அரசியல் தலைவர்கள் கூடும் இடங்கள்.. முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு என எங்கும் எதிலும் ஜோந்தாமினர்கள் பாதுகாப்புக்கு உண்டு!! 
 
அதெல்லாம் சரிதான்... ஆனால் இதை கேட்டீர்கள் என்றால் அட பாவமே என்பீர்கள்.. 
 
ஜோந்தாமினர்களுக்கான பணியில், ஆறுகள், குளம், ஏரி கடற்கரைகளை பாதுகாக்கும் பணிகளும் உண்டு. ஆற்றங்கரையை சேதமாக்கினால் ஜோந்தாமினர்கள் பறந்து வந்து கைது செய்வார்கள். எச்சில் துப்பினால் எமன் தான் ஜோந்தாமினர்கள்!!
 
சுருக்கமாக சொல்வதென்றால்... பிரான்சின் 95 வீதமான நிலப்பரப்பினை ஜோந்தாமினர்கள் பாதுகாக்கின்றனர். அப்போ மீதி 5 வீதம்? அது தான் எங்களுக்கும் தெரியவில்லை!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்