பதைபதைக்க வைத்த பனிச்சரிவு - வரலாற்றில் இருந்து..!!
11 மார்கழி 2017 திங்கள் 14:30 | பார்வைகள் : 20051
தன் வீரியத்துக்கு எதிரே எதுவும் நிற்காது என்பதை இயற்கை ஆண்டாண்டு காலமாக நிறுவிக்கொண்டே உள்ளது. இயற்கை பேரழிவுகள் ஒரு சாட்சி! மழையோ.. வெயிலோ.. கொஞ்சம் அதிகமானால் அழிவு தான். இருக்கட்டும்.. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் ஒரு ஆபத்தான பனிச்சரிவு குறித்து பார்க்கலாம்..
ஆப்ல்ஸ் மாகாணக்தின் massif des Cerces இல் உள்ள ஒரு மனிமலை கிராமம் Valfréjus. விளையாட்டு வீரர்களின் பனிச்சறுக்கு விளையாட்டு இங்கு மிக பிரபலம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி ஒரு சம்பவம் இடம்பெற்றது. 51 பனிச்சறுக்கு வீரர்கள் அப்பகுதியில் போட்டியில் ஈடட்டிருந்தனர். ஆபத்து காத்திருந்தது. எல்லைகள் பிரிக்கப்பட்டு பனிச்சறுக்கு விளையாட்டு வெகு சிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது மிக மோசமாக வீசிய பனிக்காற்று மற்றும் சூறாவளியினால் 100 மீட்டர்கள் அகலம் கொண்ட பாரிய பனிக்கட்டி உடைந்து விழுந்தது.
விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்கள் மீது இது விழவும், பல வீரர்கள் பனிப்பாறையில் சிக்கி புதைந்து போனார்கள். பனி பாறை விழுந்ததுமே மீட்புக்குழு மிக வேகமாக செயற்பட்டு வீரர்களை மீட்டனர். 13 வீரர்கள் மொத்தமாக புதையுண்டு போயிருந்தனர். அதில்,
பிரான்ஸ், மடகாஸ்கர், மால்டோவா, இத்தாலி, நேபாளம், ஆல்பேனியா, ஹங்கேரி ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த ஏழு வீரர்கள் இந்த விபத்தில் கொல்லப்பட்டிருந்தனர். தவிர மேலும் 5 பேர்கள் காயமடைந்தனர்.
பின்னர் இவர்களுக்கு அனுமதி அளித்தது யார் என்பது உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட விசாரணைகள் இடம்பெற்றது. 'மிக மோசமான வீண் முயற்சி!' என தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, துக்க நாளாக அறிவித்து அஞ்சலி செலுத்தியதோடு அந்த சம்பவம் முடிவுக்கு வந்தது. இயற்கை போன்றதொரு தோழனும் இல்லை எதிரியும் இல்லை!!