Essonne : பாடசாலையில் இருந்து காணாமல் போன சிறுமி.. - சடலமாக மீட்பு!
![Essonne : பாடசாலையில் இருந்து காணாமல் போன சிறுமி.. - சடலமாக மீட்பு!](ptmin/uploads/news/France_rajeevan_GjQXCWqWIAA-Mkx.jpg)
8 மாசி 2025 சனி 10:02 | பார்வைகள் : 1610
பாடசாலை வளாகத்தின் முன்பாக வைத்து காணாமல் போன 11 வயதுடைய சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Epinay-sur-Orge (Essonne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று பெப்ரவரி 7 ஆம் திகதி பிற்பகால் 3 மணி அளவில் பாடசாலை வளாகத்தின் முன்பாக வைத்து 11 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்தார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குறித்த சிறுமி தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், இரவு 2.30 மணி அளவில் அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். Bois des Templiers பகுதியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மரங்களோடு மரங்களாக அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உடனடியாக அவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
![](/images/engadapodiyalxy.jpg)