Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவுக்கு பனிப்புயல் எச்சரிக்கை

பிரித்தானியாவுக்கு பனிப்புயல் எச்சரிக்கை

8 மாசி 2025 சனி 10:45 | பார்வைகள் : 1759


பிரித்தானியாவில் உள்ள 37 நகரங்கள் 450 மைல் அளவிலான பனிச்சுவர் (450-mile wall of snow) தாக்கத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த 37 முக்கிய நகரங்கள் பனிமழையால் மூடப்படும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, ஸ்கொட்லாந்தின் மையப்பகுதிகளில் வெப்பநிலை 0°C ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் பிற பகுதிகளில் 2°C முதல் 4°C வரை இருக்கும் என கூறப்படுகிறது.

கடுமையான குளிர்ச்சியால் பனிமழை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் யார்க்ஷைர் பகுதிகளுக்கு மஞ்சள் (Yellow) நிலை குளிர்ச்சி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை பெப்ரவரி 9 முதல் பெப்ரவரி 11 வரை விடுக்கப்பட்டுள்ளது.

 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்