பொபினி - இளைஞன் வன்முறை - குற்றவாளிகளிற்கு வழக்கு!
![பொபினி - இளைஞன் வன்முறை - குற்றவாளிகளிற்கு வழக்கு!](ptmin/uploads/news/France_jana_courts.jpg)
8 மாசி 2025 சனி 11:09 | பார்வைகள் : 2183
பொபினியில் கடந்த 7ம் திகதி, கொலேஜ் வாசலில் வைத்து 15 வயது மாணவன் மிக மோசமாகத் தாக்கப்பட்டிருந்தார்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருந்த இருவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
17 வயதுடைய சிறுவனும், அவரது தமையனான, இந்த கெலேஜின் மேற்பார்வையாளரான (surveillant) 22 வயதுடையவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த 17 வயது இளைஞன், குறிப்பிட்ட இந்தக் கொலேஜில் கல்வி கற்காவிட்டாலும், தனது தமையான மேற்பார்வையாளரிற்கு எதிராக சுவரில் வாசகம் எழுதப்பட்டதற்காகவே, இந்தப் 15 வயதுச் சிறுவனை மிகவும் மோசமான வன்முறையுடன் தாக்கி உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
![](/images/engadapodiyalxy.jpg)