Paristamil Navigation Paristamil advert login

Johnny Hallyday - ஒரு இசை சகாப்தம்!!

Johnny Hallyday - ஒரு இசை சகாப்தம்!!

7 மார்கழி 2017 வியாழன் 10:30 | பார்வைகள் : 19505


பாடகர் Johnny Hallyday, ஐம்பதாண்டு கால பாடகர். பிரெஞ்சு தேசத்தின் புகழ் மிக்க பாடகர். 
 
தனது ஆரம்ப கால பாடகர் கனவை Café de Paris இல் நிகழ்த்துகிறார். தனது நண்பர்களுடன் இணைந்து Café de Paris இல்,  பல பாடல்கள் பாடுகிறார். இசை வாழ்க்கை மிகச்சிறிய வயதில் அங்கேயே ஆரம்பிக்கிறது...
 
அப்போது உலகம் முழுவதும் சக்கை போடு போட்ட இசைவடிவமான 'rock 'n' roll' இனை பிரெஞ்சுக்கு கொண்டு வருகிறார்.. இதை இசைத்தட்டாக வெளியிட்டால் மிகப்பெரும் வெற்றியடையும் என அப்போது உணர்கிறார். 
 
1960 ஆம் ஆண்டு. அவரின் முதல் இசைத்தட்டு 'Hello Johnny' வெளியாகிறது. சரித்திரம் படைக்கும் பலரும் தங்களது முதல் படைப்பிலேயே சாதனை செய்திருப்பார்கள். Johnny விதிவிலக்கா என்ன? அல்பம் மிகப்பெரும் வெற்றியடைகிறது. 
 
அடுத்தவருடமே Let's Twist Again எனும் ஒரு ஆல்பத்தை வெளியிடுகிறார். அந்த வருடத்தில் 'தங்கத்தட்டு' பட்டியலில் சேர்ந்ததோடு.. மிகப்பெரும் விற்பனை சாதனையும் படைக்கிறது. 
 
அதன் பின்னர், இமாலய வரவேற்பு இவருக்கு ஏற்பட, வெளியான ஒவ்வொரு இசைத்தட்டும் மிகப்பெரும் வெற்றியடைந்தது. 
 
100% Johnny எனும் பெயரில் அவர் நிகழ்த்தும் இசை நிகழ்ச்சிகளை காண ஏராளமான இரசிகர்கள் கூடுவார்கள். 2000 ஆம் ஆண்டு ஈஃபிள் கோபுரத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். (Live à la tour Eiffel ) ஐந்து இலட்சம் மக்கள் நிகழ்ச்சினினை காண கூடுகிறார்கள். தவிர 9.4 மில்லியன் பேர் இசை நிகழ்ச்சியை நேரடியாக தொலைக்காட்சியில் பார்வையிட்டனர். 
 
இவரின் சினிமா வாழ்க்கையும் வெற்றிகரமாகவே  இருந்தது. 1962 ஆம் ஆண்டு Les parisiennes எனும் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தவர், இவ்வருடம் 2017 ஆம் ஆண்டு Chacun sa vie et son intime conviction எனும் திரைப்படம் வரை தன்னை ஒரு நல்ல நடிகராகவும் நிலை நிறுத்தினார். 
 
இவரின் பல இசைத்தட்டுக்கள் விற்பனை சாதனை செய்து No.1 எனும் இடத்தை நிரந்தரமாக தக்கவைத்தது. இவரின் 18 இசைத்தட்டுக்கள் 110 மில்லியன் பிரதிகள் விற்று இமாலய சாதனை படைத்தது. 
 
Johnny Hallyday இன்று நம்மிடையே இல்லை என்றாலும், பிரெஞ்சு இசைத்துறைக்கு இவரின் பங்கும், இடமும் என்றுமே அசைக்கமுடியாத ஒன்று!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்