துப்பாக்கிச்சூடு - ரெய்ட் அதிரடிப்படையினர் காயம் - ஈராக்கியர்கள் கைது!
![துப்பாக்கிச்சூடு - ரெய்ட் அதிரடிப்படையினர் காயம் - ஈராக்கியர்கள் கைது!](ptmin/uploads/news/France_jana_FIRING.jpg)
8 மாசி 2025 சனி 18:26 | பார்வைகள் : 1360
இன்று அதிகாலை 1 மணியளவில் A31 நெடுஞ்சாலையில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட, ஒரு பிரித்தானிய இலக்கத்தகடுள்ள சிற்றுந்தைக் காவறதுறையினர் இருவர் துரத்திச சென்று தடுக்க முயன்றுள்ளனர்.
A31 இல் Selongey (Côte-d'Or) அருகில், இந்தப் பிரித்தானிய இலக்கத்தகடுள்ள சிற்றுந்தில் இருந்து காவற்துறையினரை நோக்கி சரமாரியாக இயந்திரத் துப்பாக்கியனால் சுட்டுள்ளனர். இதனால் காவற்துறையினரும் திருப்பிச் சுட்டுள்ளனர். இதில் ஒரு ரெய்ட் (RAID) அதிரடிப்படை வீரர் காயமடைந்துள்ளார்.
அதனையும் மீறித் தப்பிச் சென்ற சிற்றுந்து சிறிது தூரத்தில் விபத்திற்கு உள்ளாகிய நிலையில் அதிலிருந்த ஒருவர் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால் சாவடைந்திருந்துள்ளார்.
ஜோந்தார்மினரின் உலங்குவானூர்தி நடவடிக்கையில் இந்தச் சிற்றுந்தில் இருந்து மூன்று ஈராக்கிய குர்திஸ்தான் நபர்கள்,காவற்துறையினர் மீது கொலைத்தக்குதல் நடாத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![](/images/engadapodiyalxy.jpg)