Paristamil Navigation Paristamil advert login

ஒரே வருடத்தில் மூன்று விபத்துக்களைச் சந்தித்த Air France! - வரலாற்றில் இருந்து..

ஒரே வருடத்தில் மூன்று விபத்துக்களைச் சந்தித்த Air France! - வரலாற்றில் இருந்து..

4 மார்கழி 2017 திங்கள் 16:30 | பார்வைகள் : 19586


Air France மிக வெற்றிகரமான விமான சேவை நிறுவனம். கிட்டத்தட்ட உலகம் முழுவதும் Air France இன் விமானங்கள் தொடர்ச்சியாக பறந்துகொண்டுதானுள்ளன. மறுபுறம் Air France விமானங்கள் அவ்வப்போது விபத்துக்களில் சிக்கிகொண்டும் உள்ளன. இன்று பிரெஞ்சு புதினத்தில் ஒரே வருடத்தில் இடம்பெற்ற மூன்று விபத்துக்கள் குறித்து பார்க்கலாம்..!!
 
1933 ஆம் ஆண்டு Air France தனது சேவையினை ஆரம்பித்திருந்தது. முதல் வருடம் எவ்வித விபத்துக்களையும், இடையூறுகளையும் சந்திக்காத நிலையில், அதற்கு அடுத்த வருடம் 1934 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக விபத்துக்களை சந்தித்தது. 
 
ஜனவரி 15, 1934 ஆம் ஆண்டு முதல் சம்பவம்.  Dewoitine D.332 எனும் விமானம் வியட்நாமின் Saigon நகரில் இருந்து பரிசுக்கு வந்துகொண்டிருந்தது. விமானக்குழுவுடன் சேர்ந்து மொத்தம் 10 பேர் விமானத்தில் இருந்தனர். பிரான்சின்  Corbigny நகரில் வைத்து விமானம் பனிப்புயலுக்குள் சிக்கிக்கொண்டது. 
 
விமானம், கட்டுப்பாட்டை இழந்து வெடித்துச் சிதறியது. விமானத்தில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர். தரவுகளின் படி, இதுவே ஏர் பிரான்சின் முதல் விமான விபத்து!! 
 
பின்னர், அதே வருட மே மாதத்தில் இரண்டாம் விபத்து இடம்பெற்றது. மே 9 ஆம் திகதி, Wibault 282T-12 எனும் விமானம்.. 6 பேர்களுடன் ஆங்கிலக் கால்வாயில் விழுந்தது. விபத்தில் 6 பேர்களும் பலியாகினர். 
 
இச்சம்பவம் இடம்பெற்று 10 ஆம் நாள்.. மே, 19 1934 ஆம் ஆண்டு,  Golden Clipper எனும் விமானம் விபத்துக்குள்ளானது. எரிபொருள் பற்றாக்குறையால் விமானம் கீழே விழுந்தது. ஆனால் அதில் ஒருவர் மாத்திரமே உயிரிழந்திருந்தார். 
 
ஒரே வருடத்தில் அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் ஏர் பிரான்ஸ் நிறுவனம் கொஞ்ஞம் ஆடிப்போய்தான் இருந்தது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்