Paristamil Navigation Paristamil advert login

பத்தொன்பது மாதங்களின் பின்னர் நல்லடக்கம். Emile

பத்தொன்பது மாதங்களின் பின்னர் நல்லடக்கம். Emile

9 மாசி 2025 ஞாயிறு 07:42 | பார்வைகள் : 4590


2023 ஜுலை 8-ம் திகதி சிறுவன் Emile அவரின் வீட்டின் அருகில் வைத்து திடீரென காணமால் போனான், அன்றிலிருந்து தேடப்பட்ட Émilieன்  உடல் பாகங்கள் சுமார் எட்டு மாதங்களின் பின்னர் 30 மார்ச் 2024 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.

காணமல் போன நாளில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் எட்டாத நிலையில், பத்தொன்பது மாதங்களின் பின்னர் கடந்த சனிக்கிழமை 08/02 /2025 அன்று சிறுவன் வாழ்ந்த 'Var' நகரில் உள்ள Saint-Maximin-la-Sainte-Baume எனும் தேவாலயத்தில் திருப்பலியுடன் சிறுவன் Émilie - ன் இறுச் சடங்கு நடைபெற்றுள்ளது.

சிறுவனின் குடும்பத்தாரின் மிக நெருங்கிய உறவினர்கள் 400 பேர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்குபற்றினர், பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்க திருப்பலியின் பெரும் பகுதி இலத்தின் மொழியில் நிறைவேற்ற பட்டது. பின்னர் La Bouilladisse  நகரில் பொதுமக்கள் சுலபமாக பார்வையிட முடியாத அமைதியான சூழலில் கடுமையான தனியுரிமையில் உள்ள இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதுவரை சிறுவன் Emile எப்படி காணாமல் போனான், என்ன நடந்தது, போன்ற எந்த கேள்விகளுக்கும் விடையில்லாத மர்மமே நீடித்து வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்