மாணவர்களுக்கு மலிவு விலையில் மரணம் "pète ton crâne" (PTC)
![மாணவர்களுக்கு மலிவு விலையில் மரணம்](ptmin/uploads/news/France_justin_ptc-drogue-225bb0-0@1x.jpeg)
9 மாசி 2025 ஞாயிறு 07:42 | பார்வைகள் : 3058
'cigarette électronique' எனப்படும் நீராவி மூலம் புகைக்கப்படும் இலத்திரனியல் சிகரெட் பாவனையைக் கொண்ட பதின்ம வயது மாணவர்களை குறிவைத்து "pète ton crâne" (PTC) என்னும் ஒருவகை திரவம் மிக இரகசியமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உயர்நிலை பள்ளிகளிலே கல்வி கற்கும் பெரும்பாலான மாணவர்கள் இந்த திரவத்தை தெரிந்து வைத்திருக்கின்றனர்.
cigarette électronique' எனப்படும் நீராவி மூலம் புகைக்கப்படும் இலத்திரனியல் சிகரெட் புகைக்கும் போது "pète ton crâne" (PTC) எனும் குறித்த திரவத்தின் சில துளிகளை சேர்க்கும் போது அதிக அளவில் போதை தருகிறது. மிக மலிவான விலையில் அதிக போதையை பெற்றுக்கொள்ள மாணவர்கள் இந்த ஆபத்தான திரவத்தை உபயோகித்து வருகின்றனர். நிறமோ, மணமோ இல்லாத இந்த திரவம் பாடசாலைகளில் சின்ன சின்ன போத்தல்களில் அடைக்கப்பட்டு மிக இரகசியமாக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
இந்த மலிவான திரவமானது கஞ்சாவின் விளைவுகளைப் பிரதிபலித்து அதன் போதையை தமக்குத் தருவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரான்ஸ் மருத்துவத்துறை மிகப் பெரும் கவலையை வெளியிட்டுள்ளது. காரணம் இதன் பாவனை பின்னாளில் மாணவர்களுக்கு மரணத்தையே பரிசளிக்கும் என தெரிவித்துள்ளது. இதன் பாவனைக்கு அடிமையானவர்கள் மிகவிரைவாக மன அழுத்தம், மன நோய், ஞாபகமின்மை, விரக்தி, தற்கொலை முயற்சி எண்ணம், நரம்பியல் நோய், சோர்வு நிலை என படிப்படியான தாக்கங்களுக்கு உள்ளாகுவார்கள் எனவும், இதில் இருந்து விடுபடாதவர்கள் மரணத்தையே சந்திப்பார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
![](/images/engadapodiyalxy.jpg)